Home மலேசியா கிளாந்தானில் வறுமை விகிதத்தை போக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்கிறார் பிரதமர்

கிளாந்தானில் வறுமை விகிதத்தை போக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்கிறார் பிரதமர்

கோத்தா பாரு, ஜூலை 23 :

கிளாந்தான் மாநிலத்தில் உள்ள 590,000 மலேசிய குடும்ப உதவி (BKM) பெறுநர்களுக்கு RM124 மில்லியன் ஒதுக்கீடு உட்பட பல்வேறு முயற்சிகள் மூலம் கிளாந்தானில் வறுமை விகிதத்தை போக்க அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

மேலும், கிளாந்தானில் பொருளாதாரம் முழுமையாக கட்டியெழுப்பப்படுவதை உறுதி செய்வதற்காக, Tok Bali திட்டமானது RM2.3 பில்லியன் முதலீட்டு இலக்கை எட்டுவதற்கு பங்களிப்பு செய்வதில், ஒரு புதிய வளர்ச்சி மையமாக மாற்ற இலக்கு கொண்டுள்ளது, மேலும் இதன்முலம் 4,200 புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் 270 தொழில் முனைவோர்களை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று சுல்தான் முஹமட் IV ஸ்டேடியத்தில் நடந்த கிலாந்தான் மலேசியக் குடும்ப அபிலாஷைகள் (AKM) சுற்றுப்பயணத்தை தொடங்கி வைத்து அவர் இவ்வாறு கூறினார்.

அத்தோடு கெத்தரேவில் உள்ள 23 ஹெக்டேர் நிலப்பரப்பில் 6 மில்லியன் ரிங்கிட் செலவில், விளையாட்டு பொழுதுபோக்குக்கு அம்சங்களுடன் கூடிய பல்நோக்கு டிஜிட்டல் வளாகத்தையும் அரசாங்கம் நிர்மாணிக்கவுள்ளதாகவும் பிரதமர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version