Home மலேசியா கட்சி தாவல் தடை சட்ட மசோதா மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நடைபெறும்

கட்சி தாவல் தடை சட்ட மசோதா மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நடைபெறும்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவலை தடுக்கும் விதிகள் மீதான அரசியலமைப்பு (திருத்தம்) மசோதா (எண் 3) 2022 மீது மக்களவையில் இன்று பிற்பகல் வாக்கெடுப்பு நடைபெறும்.

சட்டத்துறை அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் இந்த மசோதா மீதான விவாதத்தை பிற்பகல் 2.30 மணிக்கு முடித்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு தேவைப்படும் மசோதாவை, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று தாக்கல் செய்தார்.

இன்றைய உத்தரவுப் பத்திரத்தின்படி, கேள்வி-பதில் அமர்வுக்குப் பிறகு மசோதா மீதான விவாதம் இரண்டாவது நாளாகத் தொடரும்.  நேற்று நடந்த விவாதத்தில் 41 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version