Home மலேசியா சார்டின் ஏற்றிவந்த லோரி கவிழ்ந்ததில் நெடுஞ்சாலை செந்நிறமாகியது..!

சார்டின் ஏற்றிவந்த லோரி கவிழ்ந்ததில் நெடுஞ்சாலை செந்நிறமாகியது..!

ஈப்போ, ஆகஸ்ட் 3 :

வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (பிளஸ்) 265.9 ஆவது கிலோமீட்டரில் தகரப்பேணியில் அடைக்கப்பட்ட சார்டின் (மத்தி) மீன்களை ஏற்றிச் சென்ற லோரி ஒன்று கவிழ்ந்ததில் நெடுஞ்சாலை செந்நிறமாகியது.

இதனால் இன்று நண்பகல் 12.43 மணியளவில், மெனோரா சுரங்கப்பாதையில் இருந்து ஈப்போ செல்லும் சாலை போக்குவரத்திற்கு தற்காலிகமாக சாலையை மூடப்பட்டது.

PLUS Malaysia Bhd (PLUS) டூவிட்டரில், மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், தெற்கே செல்லும் பயணிகள் கோலா கங்சார் வெளியேறும் வழிக்கு திருப்பி விடப்படுவதாகவும் கூறியது.

மேலும் நெடுஞ்சாலையின் “KM267.0 இலிருந்து KM265.1 வடக்கு நோக்கிய போக்குவரத்து மெதுவாக உள்ளது,” PLUS மேலும் தெரிவித்தது.

கோலா கங்சார் மாவட்ட காவல்துறைத் தலைவர், ஏசிபி உமர் பக்தியார் யாக்கோப் கூறுகையில், விபத்து நடந்த இடத்தில் கவிழ்ந்த லோரியை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் சாலை சுத்தம் செய்யப்பட்டு அனைத்தும் அகற்றப்பட்ட பிறகு மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version