Home மலேசியா பாலிங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பேரரசர் நன்கொடை

பாலிங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பேரரசர் நன்கொடை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 :

கெடாவின் பாலிங்கில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செக்கோலா மெனெங்கா அகமா (அரபு) யாசான் அல்-கஹ்ரியாவைச் சேர்ந்த மாணவர்கள் மாட்சிமைதங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவிடமிருந்து உதவிகளைப் பெற்றனர்.

இஸ்தானா நெகாரா முகநூல் பதிவின்படி, மாட்சிமைதங்கிய பேரரசரின் விமானப்படை உதவியாளரும் இஸ்தானா நெகாரா பேரிடர் மீட்புக் குழு இயக்க இயக்குநருமான பிரிகேடியர் ஜெனரல் டத்தோ முகமட் ஜஹாரி யாஹ்யா, இந்த நன்கொடைகளை நேற்று பள்ளி முதல்வர் அப்துல் ரஹ்மான் யாஹ்யாவிடம் வழங்கினார்.

முகநூலில் வெளியிடப்பட்ட செய்தியின் படி, “மாணவர்களின் சுமையை குறைக்க இந்தப் பங்களிப்புகள் உதவும் என்று பேரரசர் நம்புவதாக குறிப்பிட்டிருந்தது.”

இது சம்பந்தமாக, எந்தவொரு பயன்பாடு அல்லது சமூக ஊடக தளம் மூலமாகவும் இன்னும் உறுதியற்ற செய்திகள் அல்லது அறிக்கைகளை தன்னிச்சையாக பரப்ப வேண்டாம் என்று ஜாஸ்மின் பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.

“அப்ளிகேஷன்கள் அல்லது சமூக ஊடக தளங்கள் மூலம் பொய்யான செய்திகளை பரப்பும் செயல், அதை பரப்பும் நபர் குற்றவாளி என கண்டறியப்பட்டால், தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் படி குற்றத்திற்காக தண்டிக்கப்படலாம்” என்று அவர் மேலும் கூறினார்.

Previous articleமாணவியை கடத்த முயன்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next articleநீதிமன்ற அவமதிப்புக்காக இந்திரா காந்தி செய்திருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version