Home மலேசியா துணைப் பிரதமர் வேட்பாளராக அஸ்மின் அலியை பரிந்துரைக்கும் பெர்சாத்து கட்சி

துணைப் பிரதமர் வேட்பாளராக அஸ்மின் அலியை பரிந்துரைக்கும் பெர்சாத்து கட்சி

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 7 :

துணைப் பிரதமர் வேட்பாளராக அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலியை நியமிக்குமாறு பெர்சாத்து கட்சி பரிந்துரைத்ததாக கட்சியின் நம்பத்தகு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கட்சி வட்டாரங்களின் தகவலின்படி, பெர்சாத்து தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினால் முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்ட துணை பிரதமர் பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கு அஸ்மின் அலி மட்டுமே பரிந்துரைக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், அஸ்மினின் அலியின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்வது மத்திய அரசாங்கத்திற்கு கடினமாக இருக்கும் என்றும் அது அம்னோ வேட்ப்பாளர்களின் எதிர்ப்பை சம்பாத்திக்கும் என்றும் அந்த வட்டாரம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜூலை 28 அன்று, பெரிகாத்தான் நேஷனல் மற்றும் பெர்சாத்து கூட்டணிக்கு இடையிலான ஒப்பந்தத்தின் பிரகாரம், துணை பிரதமர் பதவியை பெர்சாத்து கட்சி கோருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version