Home மலேசியா விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலில் உள்ளவர்கள் இணையம் மூலம் விற்பனை செய்வதைக் கருத்தில் கொள்ள வேண்டும்...

விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலில் உள்ளவர்கள் இணையம் மூலம் விற்பனை செய்வதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் கியாண்டி

செர்டாங், ஆகஸ்ட் 7 :

விவசாயிகள், தோட்டக்காரர்கள் மற்றும் மீனவர்கள் தமது விளைபொருட்கள் மீதான இடைத்தரகர்களைத் தவிர்ப்பதற்காக இணையம் மூலமான விற்பனையினையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று டத்தோஸ்ரீ டாக்டர் ரொனால்ட் கியாண்டி கூறுகிறார்.

விவசாயம் மற்றும் உணவுத் தொழில்துறை அமைச்சருமான அவர் தொடர்ந்து கூறுகையில், இணைய சந்தை மிகவும் விரிவானது மற்றும் அதிக வருமானத்தை பெற்றுக்கொள்ளக் கூடியது என்று அவர் உறுதியளித்தார்.

எனவே, தகவல் தொழில்நுட்பத்தில் அதிக கல்வியறிவு பெற்ற இளைஞர்கள் இணைய சேவைகளைப் பயன்படுத்துவதோடு, அந்தத் துறையில் நிபுணத்துவம் மற்றும் திறன்களை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இவ்வாறு “இடைத்தரகர்களின் (விலை உயர்வு) பிரச்சினைகளை எதிர்த்துப் போராடும் முயற்சியில், மத்திய வேளாண்மை சந்தைப்படுத்தல் ஆணையத்தின் மூலம் உழவர் சந்தைகள் மற்றும் விளைபொருள் சேகரிப்பு மையங்கள் மூலம் சந்தைப்படுத்தல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version