Home மலேசியா கோலாலம்பூரில் இன்று மரங்கள் விழுந்தது தொடர்பான எட்டு சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூரில் இன்று மரங்கள் விழுந்தது தொடர்பான எட்டு சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 22 :

தலைநகரில் இன்று மாலை மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியதில், மரங்கள் விழுந்த மொத்தம் 8 சம்பவங்கள் பதிவாகின.

கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மாநில செயல்பாட்டுப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், சம்பந்தப்பட்ட இடங்களாக ஜாலான் டுத்தாமாஸ், மொண்ட் கியாரா பைன்ஸில் உள்ள 163 கொண்டோமினியங்களுக்கு முன்னால் உள்ள உள்துறை அமைச்சகத்தின் (KDN) வளாகம், லோரோங் துடா 4 புக்கிட் துங்கு மற்றும் ஜாலான் இஸ்மாயில் கானே மற்றும் காசிப்பிள்ளை காம்போங் ஆகியவை அடங்கும்.

ஜாலான் பேருவாஸ் டாமான்சாரா ஹைட்சில் கார் மரத்தில் மோதிய சம்பவம் நடந்ததாகவும் அவர் கூறினார்.

“அது தவிர, மரம் விழுந்த இன்னொரு சம்பவத்தில் ஆக்ஸியா ரக கார் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்தன.

அதுமட்டுமின்றி, ரோயல் டொமின் ஸ்ரீ புத்ரா மாஸ் 2, ஜாலான் குவாங் மற்றும் ஜாலான் லெம்பா டூத்தா , தாமான் டூத்தா, கோலாலம்பூர் ஆகிய இடங்களிலும் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து தடைபட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version