Home மலேசியா மக்காவ் மோசடியில் சிக்கி ஓய்வுபெற்ற பெண் அரசு ஊழியர் ஒருவர் RM352,050 இழந்தார்

மக்காவ் மோசடியில் சிக்கி ஓய்வுபெற்ற பெண் அரசு ஊழியர் ஒருவர் RM352,050 இழந்தார்

பாப்பார், ஆகஸ்ட் 24 :

ஓய்வுபெற்ற பெண் அரசு ஊழியர் ஒருவர், மக்காவ் மோசடியில் சிக்கி RM352,050 இழந்தார்.

62 வயதான பாதிக்கப்பட்டவருக்கு ஆகஸ்ட் 17 ஆம் தேதி, காலை 9.07 மணிக்கு இணையத்தில் கொள்முதல் செய்ததாக SMS வந்ததாக பாப்பார் மாவட்ட காவல்துறை தலைவர், துணை கண்காணிப்பாளர் கமாருதீன் அம்போ சக்கா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் பின்னர் SMS இல் சேர்க்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை அழைத்தார், அப்போது சந்தேக நபர், தன்னை ஒரு வங்கி அதிகாரியைப் போல ஆள்மாறாட்டம் செய்து, பாதிக்கப்பட்டவரின் அனைத்து வங்கிக் கணக்குத் தகவல்களையும் கேட்டார்.

“பாதிக்கப்பட்டவர் தனது அனைத்து வங்கிக் கணக்குத் தகவல்களையும், மற்றும் பரிவர்த்தனை உறுதிப்படுத்தல் குறியீடு (TAC) எண்ணுடன் பகிர்ந்து கொண்டார்.

“ஆகஸ்ட் 20 அன்று, தனது வங்கிக் கணக்கில் இருந்து RM352,050 பணம் சந்தேக நபரினால் மூன்றாம் நபர் கணக்கிற்கு மாற்றப்பட்டதை உணர்ந்தார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண்மணி, நேற்று போலீசில் புகார் செய்தார்.

மோசடி குற்றத்திற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 420 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

Previous articleமுன்னாள் பிரதமர் நஜிப்பிற்கு அரச மன்னிப்பு வழங்க வேண்டும் – நஜிப் ஆதரவாளர்கள் பேரரசருக்கு மகஜர்
Next articleகார் மீது மோட்டார் சைக்கிள் மோதி தீப்பிடித்ததில், கல்லூரி மாணவர் ஒருவர் பலி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version