Home மலேசியா உறைவிடப் பள்ளியில் மூன்று மாணவர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் அதே பள்ளியின் 11 மாணவர்கள் கைது

உறைவிடப் பள்ளியில் மூன்று மாணவர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் அதே பள்ளியின் 11 மாணவர்கள் கைது

சுக்கை, ஆகஸ்ட் 29 :

கடந்த வாரம் இங்குள்ள உறைவிடப் பள்ளியின் மூன்று மாணவர்களைத் தாக்கிய வழக்கில், அதே பள்ளியின் 11 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

13 முதல் 16 வயதுக்குட்பட்ட அனைத்து சந்தேக நபர்களும், இன்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) கெமாமானில் உள்ள பள்ளி விடுதி மற்றும் அவர்களது வீடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டதாக கெமாமன் மாவட்ட காவல்துறைத் தலைவர், ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.

கடந்த வியாழன் (ஆகஸ்ட் 25) விடுதியில் இருந்த பல மாணவர்கள் சேர்ந்து அவர்களை அடித்ததாகக் கூறி, 13 முதல் 15 வயதுக்குட்பட்ட மூன்று பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து காவல்துறைக்கு புகார்கள் வந்தன.

“சந்தேக நபர்கள் விடுதியில் புகைபிடிப்பதாக பள்ளி ஆசிரியரிடம் புகார் அளித்ததற்காக, தாங்கள் தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

மாணவர்கள் குழு “தாக்கியதில் முதல் பாதிக்கப்பட்டவரின் வலது செவிப்பறை வெடித்தது, இரண்டாவது மற்றும் மூன்றாவது பாதிக்கப்பட்டவர்களின் உடலில் காயங்கள் ஏற்பட்டன,” என்று அவர் இங்கு செய்தியாளர்களிடம் கூறினார்.

11 சந்தேக நபர்களும் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கலவரம் செய்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 147 மற்றும் கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக பிரிவு 235 இன் கீழ் விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று ஹன்யான் கூறினார்.

வன்கொடுமை வழக்குகள் மற்றும் பகடி வதை குறித்து பள்ளி நிர்வாகங்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் தங்கள் வளாகங்களில் நடப்பதாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version