Home மலேசியா நாட்டை நேசித்து, அமைதி மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க மலேசியர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றுபடுவோம் –...

நாட்டை நேசித்து, அமைதி மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க மலேசியர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றுபடுவோம் – பிரதமர்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 :

இன்று மலேசியா தனது 65-ஆவது சுத்தந்திர தினத்தை கொண்டாடுகிறது. தேசிய தினத்தை முன்னிட்டு நேற்று இரவு உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட பிரதமரின் உரையில்; ” மலேசியாவின் மீது ஆழமான அன்பினைக் கொண்டிருப்பதன் மூலம் மட்டுமே, பல்வேறு இனங்கள் தொடர்ந்தும் ஒன்றிணைந்து, நாட்டின் அமைதி மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்க மலேசியர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றுபடுவோம் ” என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

மேலும் மலேசியாவை அபிவிருத்தி செய்வதற்கும் அதன் இறையாண்மையைப் பாதுகாப்பதற்குமான முயற்சிகளில் இது முக்கியமானது என்று பிரதமர் கூறினார்.

“சகோதரத்துவ சூழலில், உறவினர்கள் பராமரிக்கப்படுகிறார்கள்; குடும்ப சூழலில், குடும்ப உறுப்பினர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்; சமூகத்தின் சூழலில், சமூகம் பாதுகாக்கப்படுகிறது; ஒரு தேசத்தின் சூழலில், இன ஒற்றுமை முக்கியமானது; உண்மையில், நாம் அனைவரும் ஒரே குடும்பம்: Keluarga Malaysia (மலேசிய குடும்பம்), அதன் பாரம்பரியத்தை நிலைநிறுத்த அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் ,” என்று அவர் கூறினார்.

சுதந்திரம் பெற்றுக்கொண்ட வரலாற்றை நினைவு கூர்ந்த இஸ்மாயில் சப்ரி, சுதந்திரம் நமக்கு இலகுவாக கிடைக்கவில்லை, அது இரத்தம், வியர்வை, தியாகம் மற்றும் கண்ணீரால் அடையப்பட்டது என்பதை மலேசியர்களுக்கு நினைவுபடுத்தினார்.

“இந்த சுதந்திரத்தின் மதிப்புகள்தான் தீபகற்பம், சபா மற்றும் சரவாக் முழுவதும் பரவியிருக்கும் தேசிய கலாச்சார ஒருங்கிணைப்பைத் தவிர, பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களின் பன்முகத்தன்மை கொண்ட Keluarga Malaysia-வில் ஒற்றுமையை வெற்றிகரமாக வளர்த்தது.

அதே நேரத்தில் “நமது பாதுகாப்புப் படைகள் – இராணுவம் மற்றும் காவல்துறை உறுப்பினர்கள் உட்பட நமது கடந்தகால தேசிய மாவீரர்களின் தியாகங்கள் மற்றும் போராட்டங்களுக்காக எங்களின் பாராட்டையும் நன்றியையும் விவரிக்க வார்த்தைகள் இல்லை,” என்று அவர் தனது உரையில் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version