Home மலேசியா கிளாந்தான் எல்லையில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த 76 வெளிநாட்டவர்கள் கைது

கிளாந்தான் எல்லையில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த 76 வெளிநாட்டவர்கள் கைது

பாசீர் மாஸ், செப்டம்பர் 2 :

இன்று அதிகாலை கிளாந்தான் எல்லையில் நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 76 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் 14 பெண்கள் உட்பட 79 பேர் பெங்கலான் ஹராம் குச்சிலிலுள்ள புதர்களுக்குள் மறைந்திருந்தபோது, அதிகாலை 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக கிளாந்தான் மாவட்ட காவல்துறை பதில் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் தெரிவித்தார்.

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொது நடவடிக்கைப் படை உறுப்பினர்களால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

“சட்டவிரோத படகுத்துறையில் பொது நடவடிக்கைப் படை உறுப்பினர்கள் (GOF) குழு வழக்கமான ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, அவர்கள் புதர்களில் நடமாட்டத்தைக் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து “சோதனை செய்ததில், அவர்கள் 62 ஆண்களையும் 14 பெண்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர் எவரிடமும் சரியான பயண ஆவணங்கள் எதுவும் இல்லை.

“எல்லையில் உள்ள பல சட்டவிரோத ஜெட்டிகளில் ஒன்றின் வழியாக அவர்கள் கிளாந்தனுக்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.

மியன்மாரில் இருந்து வந்த வெளிநாட்டவர்கள் அனைவரும், மேல் நடவடிக்கைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Previous articleநவம்பரில் பெரும் வெள்ளத்துக்கு வாய்ப்பு; மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்
Next articleமுன்னாள் தனியார் மருத்துவமனை அதிகாரியான மகேந்திரன் உள்ளிட்ட மேலும் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version