Home மலேசியா திரெங்கானுவில் இரண்டு தலைகளுள்ள கடல் ஆமைக் குஞ்சு கண்டுபிடிப்பு

திரெங்கானுவில் இரண்டு தலைகளுள்ள கடல் ஆமைக் குஞ்சு கண்டுபிடிப்பு

கோல திரெங்கானு, செப்டம்பர் 2 :

டுங்கூனில் உள்ள தஞ்சோங் ஜாரா ரிசார்ட்டில் உள்ள ஆமைகள் குஞ்சு பொரிக்கும் இடத்தில் புதிதாகப் பொரித்த இரண்டு தலைகளுள்ள டைசெபாலிக் பச்சை கடல் ஆமைக் குஞ்சு ஒன்றை கடந்த செவ்வாயன்று கண்டுபிடித்தனர்.

LTTW தள மேலாளர், அபிடா ஜாபா கூறுகையில், ஆரம்பத்தில் குஞ்சு பொரித்த குஞ்சு மணலில் தள்ள முயற்சிப்பதைப் பார்த்தபோது அது சாதாரண ஆமை என்று தான் நினைத்தோம்.

“ஆனால் அது முழுமையாக வெளிப்பட்ட பிறகு, அதற்கு இரண்டு தலைகள் இருப்பதை நாங்கள் பார்த்தோம்,” என்று அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார், கூட்டில் 110 முட்டைகள் இருந்ததாகவும், பின்னர் மேற்கொண்ட ஆய்வில் 89 குஞ்சு பொரித்திருப்பது கண்டறியப்பட்டது என்றும் கூறினார்.

2016 இல் திறக்கப்பட்ட இந்த குஞ்சு பொரிப்பகத்தில், கடந்த ஜூன் மாதம் மற்றொரு இரண்டு தலை ஆமை கண்டுபிடிக்கப்பட்டாலும், அது இறந்துவிட்டது. அனால் உயிருடன் இருப்பது இதுவே முதல் முறை என்று அபிதா கூறினார்.

இந்த ஆமைக்குஞ்சின் இரு தலைகளும் ஒரே மாதிரியான உருவ அமைப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளது ஆனால் ஒவ்வொரு தலையிலும் உள்ள முக செதில்கள் வேறுபட்டவை, அதாவது புகைப்பட அடையாள நுட்பத்தின் மூலம் அவர்கள் வெவ்வேறு நபர்களாக அடையாளம் காணப்படலாம்” என்றார்

​​”இரண்டு தலை ஆமை போன்ற அசாதாரண உயிரிகளை பராமரிப்பதில் தமக்கு பரீட்சயம் இல்லாததால்
ஆமைக் குஞ்சு இப்போது மீன்வளத் துறையின் (DOF) கீழ் Rantau Abang இல் உள்ள ஆமை பாதுகாப்பு மற்றும் தகவல் மையத்தில் (TCIC) ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version