Home மலேசியா பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தந்தை மீது குழந்தை நடிகை புகார் – போலீஸ்

பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தந்தை மீது குழந்தை நடிகை புகார் – போலீஸ்

கோலாலம்பூர், செப்டம்பர் 6 :

அவரது தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக சமூக ஊடகம் ஒன்றில் வெளியான பேட்டியில் தெரிவித்திருந்த குழந்தை நடிகையிடமிருந்து புகார் பெற்றதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நேற்று திங்கள்கிழமை (செப். 5) இரவு, தற்போது 15 வயது சிறுமியாக இருக்கும் அவர் அளித்த அறிக்கையில், 2013 முதல் தான் தனது தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்தாக கூறியதாக சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் வான் அஸ்லான் வான் மாமட் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்ட சிறுமி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தான் குழந்தையாக இருந்தபோது, தனது தந்தை தனது மொபைல் போனில் ஆபாசப் படத்தைப் பார்க்க வைத்ததாகக் கூறினார்,” என்று அவர் கூறினார்.

இந்த சம்பவம் அவர் சுபாங் ஜெயாவில் தங்கியிருந்தபோது நடந்ததாகத் தெரிகிறது, ஏனெனில் அவர் கூறும் குற்றச்சாட்டுக்கள் 6- ஆண்டுகள் பழமையானவை.

வான் அஸ்லான் மேலும் கூறுகையில், தனது தாய் அருகில் இல்லாத ஒவ்வொரு முறையும் தனது தந்தை தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அச் சந்தர்ப்பங்களை அவர் தனக்கு சாதகமாக நடந்து கொண்டதாகவும் அந்த இளம்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

“ஒரு தனிநபரின் அடக்கத்தை சீர்குலைத்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354 இன் கீழ், பாலியல் துன்புறுத்தலுக்காக குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(a) மற்றும் ஆபாசப் பொருட்களை வைத்திருந்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 292 இன் கீழ் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.” அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் கூற்று தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் முன் வந்து, நடந்து வரும் விசாரணைக்கு உதவுமாறு அவர் வலியுறுத்தினார்.

“பொதுமக்கள் சுபாங் ஜெயா காவல்துறை கட்டுப்பாட்டு அறையை 03-78627100 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் நோர் அடிலா ரோஸ்லியை 016-6873616 என்ற எண்ணில் அழைக்கலாம்” என்று வான் அஸ்லான் மேலும் கூறினார்.

சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது குழந்தை நடிகை தனக்கு நடந்த கொடுமையை வெளிப்படுத்தியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version