Home மலேசியா ஒரு மாதத்திற்குள் PerantiSiswa டேப்லேட்டுக்காக சுமார் 66,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்

ஒரு மாதத்திற்குள் PerantiSiswa டேப்லேட்டுக்காக சுமார் 66,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்

கோலா பெசூட், செப்டம்பர் 8 :

மலேசியக் குடும்பத்தின் ( Keluarga Malaysia) கீழ் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திறக்கப்பட்ட PerantiSiswa டேப்லேட் வழக்கும் திட்டம் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஒரு மாதத்திற்குள் மொத்தம் 65,898 அரசாங்கம் பெற்றுள்ளது.

அவற்றில் மொத்தம் 20,557 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், மொத்தம் 45,341 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் நோரைனி அகமட் தெரிவித்தார்.

“B40 குழுவைச் சேர்ந்த 300,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட மொத்தம் 1.6 மில்லியன் மாணவர்கள் இந்த பிரிவில் உள்ளனர். எனவே இன்னும் விண்ணப்பிக்காத தகுதியுள்ள மாணவர்களை விரைவாக விண்ணப்பிக்குமாறு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம், ஏனெனில் விண்ணப்ப செயல்முறைக்கு கடைசி நாள் செப்டம்பர் 30,” என்று அவர் கூறினார்.

திரெங்கானுவில், மொத்தம் 3,156 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதாகவும், 150 UniSZA மாணவர்கள் குழுவே இம் மாநிலத்தில் இன்று தங்களது டேப்லேட்டுக்களை பெற்ற முதல் குழுவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version