Home மலேசியா கடையில் கொள்ளையடித்த இரு ஆடவர்களை, 8 மணி நேரத்திற்குள் கைது செய்து போலீஸ் அதிரடி

கடையில் கொள்ளையடித்த இரு ஆடவர்களை, 8 மணி நேரத்திற்குள் கைது செய்து போலீஸ் அதிரடி

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 8 :

ஒரு கடையில் கொள்ளையடித்த இரு ஆடவர்களை, 8 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்துள்ளனர்.

25 முதல் 39 வயதுடைய இரு சந்தேக நபர்களும், இன்று நண்பகல் 1.30 மணியளவில் இங்குள்ள டாமான்சாரா பகுதியில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபக்ருதீன் அப்துல் ஹமீத் கூறுகையில், சந்தேக நபர்கள் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் அதிகாலை 5 மணியளவில் பல்வேறு வகை சிகரெட்டுகள் மற்றும் RM1,043 மதிப்புள்ள பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு சென்றுள்ளார்.

குறித்த கடையில் ஒரு ஊழியர் பணம் செலுத்தும் கவுண்டரில் இருந்தபோது சந்தேக நபர்கள் வளாகத்திற்குள் நுழைந்தனர்.

காயம் ஏற்படும் என அஞ்சி, வளாகத் தொழிலாளி பணம் மற்றும் சிகரெட்டுகளை அவரிடம் ஒப்படைத்துள்ளார், அதன் பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

“சம்பவம் நடந்த உடனேயே உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததும், டாமான்சாராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் சந்தேக நபரை கைது செய்தனர்.

“முகலாவது சந்தேக நபரின் வழிகாட்டுதல்கள் பின்னர் மற்றொரு பகுதியில் இரண்டாவது சந்தேக நபர் கைது செய்ய வழிவகுத்தது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

இரண்டு சோதனைகளிலும், கொள்ளையடிக்கப்பட்ட பல்வேறு பொருட்களையும், சம்பவத்தில் சந்தேக நபர் பயன்படுத்திய ஆடைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் ஒரு மோட்டார் சைக்கிள்,RM1,520 ரொக்கம் மற்றும் கத்தி மற்றும் மொபைல் போன் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

“சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம், மாவட்டம் முழுவதும் உள்ள கடைகள் சம்பந்தப்பட்ட மூன்று கொள்ளை வழக்குகள் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டுள்ளன என்று போலீசார் நம்புகிறார்கள்.

“சந்தேக நபர்கள் இருவருக்கும் 2012 முதல் கடந்த ஆண்டு வரை போதைப்பொருள் உட்பட பல கடந்த கால குற்றப் பதிவுகள் உள்ளன.

“இவ்வழக்கு குற்றவியல் சட்டம் (கே.கே) பிரிவு 392 இன் படி வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது, மேலும் சந்தேக நபர்களை நாளை மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தி, போலீசார் தடுப்புக் காவல் உத்தரவை பெறவுள்ளார் ” என்று அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version