Home மலேசியா ரெம்பாவ்வில் ஏற்பட்ட கடுமையான புயலால் நான்கு வீடுகள் சேதம்..!

ரெம்பாவ்வில் ஏற்பட்ட கடுமையான புயலால் நான்கு வீடுகள் சேதம்..!

ரெம்பாவ், செப்டம்பர் 9 :

நேற்று பெய்த இடியுடன் கூடிய பலத்த மழையின் போது ஏற்பட்ட கடுமையான புயலால், ரெம்பாவ் மாவட்டத்திலுள்ள நான்கு வீடுகள் சேதமடைந்தன.

ரெம்பாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் முகமட் இஸ்வான் எம்டி சைட் கூறுகையில், இந்த சம்பவம் மாலை 6.30 மணியளவில் நடந்தது, இதனால் பாதிக்கப்பட்ட அனிதா அப்துல் வஹாப் என்பவரது வீட்டிற்கு 80 சதவீதம் சேதம் ஏற்பட்டது, அதே நேரத்தில் அவரது பெற்றோர் வீட்டின் கூரை மட்டுமே சேதமடிந்தது.

அத்தோடு “மின்சார பொருட்கள் மற்றும் மரச்சாமான்கள் சேதப்படுத்தப்பட்டதோடு, கூரையும் பொறிந்து விழுந்து சேதமடைந்ததால், அனிதா அப்துல் வஹாப்பிற்கு RM50,000 முதல் RM100,000 வரை சொத்து இழப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தால் மொத்தம் நான்கு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, ஆனால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

அப்பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட 58 வயதான ரோஜிதா அப்துல் வஹாப் கூறும்போது, நேற்று நண்பகல் இங்குள்ள கம்போங் தஞ்சோங் பெரங்கான் செப்ரியில் உள்ள தனது தாய் மற்றும் சகோதரியின் வீடுகள் புயலினால் சேதமடைந்தன என்றார், வீட்டுக் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுவதற்கு முன்பே எங்கள் வீடு கடுமையாக குலுங்கியது,”என்றார்.

மேலும் பிற்பகல் 6.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், அவரது சகோதரி அனிதா அப்துல் வஹாப் (59) என்பவரின் வீடும், அதனை ஒட்டிய தாயாரின் வீட்டின் கூரைகள் பலத்த சேதமடைந்துள்ளது.

சம்பவத்தின் போது அவர் தனது தாயார் வீட்டில் இருந்ததாகவும், ஆனால் சகோதரி வெளியில் வேலை செய்வதால் தனது சகோதரியின் வீடு காலியாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

“இந்தப் புயல் திடீரென்று விரைவாக வீசியது. தெளிவான வானம் இருண்டது, அதைத் தொடர்ந்து பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது.

“நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் எனது தாய் வீட்டில் இருந்தோம். ஆனால் எனது சகோதரியின் வீட்டின் மேற்கூரை காற்றில் அடித்துச் செல்லப்பட்டதை நாங்கள் தெளிவாகக் கண்டோம்,” என்று அவர் முன்பு கூறினார்.

இதற்கிடையில், டிரைவிங் இன்ஸ்டிட்யூட்டில் ஆசிரியையாக இருக்கும் அனிதா, தான் வேலை செய்து கொண்டிருந்ததால் சம்பவம் நடந்தபோது வீட்டில் இல்லை என்று கூறினார்.

“சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் வீட்டிற்கு விரைந்தேன். வீட்டிற்கு வந்தவுடன் வீட்டின் மேற்கூரை எங்கோ காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். வீடு பலத்த சேதமடைந்துள்ளது,” என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version