Home மலேசியா Night Cream ForU வில் விஷத்தன்மை – விற்பனைக்கு தடை விதித்தது சுகாதார அமைச்சகம்

Night Cream ForU வில் விஷத்தன்மை – விற்பனைக்கு தடை விதித்தது சுகாதார அமைச்சகம்

புத்ராஜெயா, செப்டம்பர் 14 :

D Ains Beauty Empire நிறுவனத்தின் Night Cream ForU வில் விஷத்தன்மை இருப்பதாகக் கண்டறியப்பட்டதால், மலேசியாவில் இனி விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது எனத் தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

hydroquinone, tretinoin மற்றும் betamethasone 17-valerate போன்ற ஆபத்தான இரசாயனங்கள் கொண்ட அழகுசாதனப் பொருட்களை சுகாதார நிபுணர்களின் மேற்பார்வையின்றி பயன்படுத்தும்போது, இது பாதகமான பக்க விளைவுகள் ஏற்படுத்தும் என்று சுகாதார அமைச்சகத்தின் தேசிய மருந்து ஒழுங்குமுறை நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இது தொடர்பாக இன்று புதன்கிழமை (செப். 14) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குறித்த அழகுசாதனப் பொருட்களின் விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உடனடியாக குறித்த அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும்.

மேலும் இவ்வாறான இரசாயனங்கள் கொண்ட அழகுசாதனப் பொருட்களின் விற்பனை மற்றும் விநியோகம் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் கட்டுப்பாடுகள் 1984ஐ மீறுவதாக டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, hydroquinone னை சருமத்தில் தடவும்போது, தோல் சிவத்தல், அசௌகரியம், தேவையற்ற தோல் நிறம் மாறுதல், தோல் அதிக உணர்திறன் அடைதல், தீங்கான அல்ட்ரா வயலட் (UV) கதிர்களில் இருந்து சருமத்தின் பாதுகாப்பைக் குறைக்கும் பிக்மென்டேஷன் செயல்முறையைத் (depigmentation) தடுத்து தோல் புற்றுநோய் ஆபத்தினை உண்டுபண்ணலாம்.

tretinoin னை மேற்பார்வையின்றிப் பயன்படுத்தினால், பாதிக்கப்பட்ட பகுதி சிவப்பாகவும், அசௌகரியமாகவும், புண் ஆகவும், செதில்களாகவும், சூரிய ஒளிக்கு அதிக உணர்திறனாகவும் மாறும் என்று அவர் கூறினார்.

Betamethasone 17-Valerate முகத்தோல் மெல்லியதாகவும், எரிச்சலுடனும், தோல் நிறமியாக மாறி, இரத்த அமைப்பில் உறிஞ்சப்பட்டு தீங்கு விளைவிக்கும் அபாயத்தை அதிகரிக்கும் என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version