Home மலேசியா மர வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், பதின்ம வயது வாலிபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்

மர வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், பதின்ம வயது வாலிபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்

கோலா லங்காட், செப்டம்பர் 18 :

இங்குள்ள பந்திங், கம்போங் ஜென்ஜரோமில் உள்ள அவரது குடும்ப வீடு இன்று தீயில் எரிந்து நாசமானதில் பதின்ம வயது வாலிபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

காலை 8.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்ட 18 வயதுடைய நபர் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார், இருப்பினும், இரண்டு மாடிகள் கொண்ட மர வீட்டில் இருந்து வெளியேறியதால் உயிர் பிழைத்தார் என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை இயக்குனர், நோராஸாம் காமிஸ்
தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் காலை 8.47 மணிக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து, பந்திங், தோலோக் பங்லிமா கராங் மற்றும் அண்டலாஸ் ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து அதிகாரிகள் உட்பட 8 பேர் கொண்ட குழு,சம்பவ இடத்திற்கு விரைந்தது.

“மேலும் ஆய்வு செய்ததில் தீ மளமளவென பரவியதில் வீடு முழுவதும் எரிந்து நாசமானது. இருப்பினும், 10 நிமிடங்களில் தீ வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது மற்றும் இது 80 சதவீத அழிவை ஏற்படுத்தியது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் போது, ​​வீட்டில் வாலிபர் தனியாக இருந்ததாகவும் “அவரது குடும்பத்தின் மற்றய எட்டு உறுப்பினர்கள் திரெங்கானுவிற்கு விடுமுறைக்கு சென்று இருப்பதாக நம்பப்படுகிறது என்றார்.

பாதிக்கப்பட்டவர் தரைத்தள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார், தீயைக் கண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வெளியே ஓடி வந்தார்,” என்று அவர் கூறினார்.

இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், சம்பவத்திற்கான உண்மையான காரணம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version