Home Top Story தங்க கிரீடம் முதல் செங்கோல் வரை…ராணியின் சவப்பெட்டி மீது வைக்கப்பட்டுள்ள பொருட்கள் என்னென்ன?

தங்க கிரீடம் முதல் செங்கோல் வரை…ராணியின் சவப்பெட்டி மீது வைக்கப்பட்டுள்ள பொருட்கள் என்னென்ன?

ராணியின் சவப்பெட்டி மீது பல பொருட்கள் வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், அது குறித்து முழு விவரங்கள் அடங்கிய தகவல் வெளிவந்துள்ளது. பிரித்தானியாவை நீண்ட காலம் ஆட்சி புரிந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில்  நடைபெற்றது.

இந்நிலையில் ராணியின் பூத உடல் அடங்கிய சவப்பெட்டி மீது வைக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முதலில் ராணியின் சவப்பெட்டியை சுற்றி அரச குடும்பத்தை குறிக்கும் கொடியான ராயல் ஸ்டாண்டர்ட் பொருத்தப்பட்டுள்ளது, இது நான்கு பேனல்களை கொண்டுள்ளது, அவற்றில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

அடுத்ததாக இம்பீரியல் ஸ்டேட் கிரீடம் இடம்பெற்றுள்ளது, இது தங்கத்தால் ஆனது மற்றும் 2,868 வைரங்கள், 17 நீலமணிகள், 11 மரகதங்கள், 269 முத்துக்கள் மற்றும் நான்கு மாணிக்கங்களால் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் பிளாக் பிரின்ஸ் ரூபி, ஸ்டூவர்ட் சபையர் மற்றும் கல்லினன் II வைரம் உள்ளிட்ட நகைகள் உள்ளன. செயின்ட் எட்வர்ட் சபையர், உச்சியில் உள்ள சிலுவையின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிரீடம்  1937 இல் ராணியின் தந்தை கிங் ஜார்ஜ் VI இன் முடிசூட்டு விழாவிற்காக உருவாக்கப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version