Home மலேசியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக நம்பப்படும் நபரைக் காணவில்லை

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக நம்பப்படும் நபரைக் காணவில்லை

கோத்தா கினாபாலு, செப்டம்பர் 21:

மங்கடாலில் உள்ள ஜாலான் சுலைமானில் உள்ள ஒரு வீட்டில் இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இன்று காலை 8 மணியளவில் நடந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட 36 வயதுடைய நபர் தனது வருங்கால மனைவிக்கு படத்துடன் குறுஞ்செய்தி (SMS) அனுப்பியதாக கூறப்படுகிறது.

குறுஞ்செய்தியினால் பீதியடைந்த அவரது வருங்கால மனைவி உடனடியாக தீயணைப்பு துறையினரை உதவிக்கு அழைத்துள்ளார்.

கோத்தா கினாபாலு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஜைதி அப்துல்லா கூறுகையில், முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் தனது வருங்கால மனைவிக்கு வீட்டின் கூரையிலுள்ள மின்விசிறியில் கட்டியிருந்த கைலியின் படத்தைக் காட்டியது கண்டறியப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அந்த பெண்ணுக்கு மேலும் பல குறுஞ்செய்திகள் அனுப்பி தான் தற்கொலை செய்து கொள்ள விரும்புவதாக அவர் கூறினார்.

அதனால் பதற்றமடைந்த அந்தப் பெண் “உடனடியாக தீயணைப்புத் துறைக்கு போன் செய்து உதவி கேட்க, உடனே தீயணைப்புத் துறை அங்கு வந்தபோது, ​​சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் இல்லை.

“இருப்பினும், சம்பந்தப்பட்ட வீட்டின் மின்விசிறியில் ஒரு நோட்டு மற்றும்கைலி கட்டப்பட்டிருந்ததை தீயணைப்புத் துறையினர் கண்டுபிடித்தனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

பின்னர் அந்த பெண் தனது வருங்கால கணவரைக் கண்டுபிடிக்குமாறு போலீசாரிடம் புகாரளித்துள்ளதாகவும் முகமட் ஜைதி கூறினார்.

Previous articleஆன்லைனில் சமையல் எண்ணெய் விற்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை
Next articleமலேசியா 10,000 புலம்பெயர்ந்த இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அனுமதி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version