Home மலேசியா சமய போதகர் எபிட் லூ மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை நாளைதொடங்குகிறது

சமய போதகர் எபிட் லூ மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை நாளைதொடங்குகிறது

பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சமய போதகர் எபிட் இரவான் இப்ராஹிம் லூ அல்லது எபிட் லூ மீதான விசாரணை நாளை முதல்  செப்டம்பர் 30 ஆம் தேதி வரை Tenom மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தொடங்குகிறது. 37 வயதான லூ, கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் வாட்ஸ்அப் செயலி மூலம் பாதிக்கப்பட்டவரின் தொலைபேசி எண்ணுக்கு ஆபாசமான வார்த்தைகளை அனுப்பி 41 வயது பெண்ணின் கெள்ரவத்தை அவமதித்தது உட்பட 11 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

குற்றவியல் சட்டத்தின் 509ஆவது பிரிவின் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும் செயலைச் செய்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். மாஜிஸ்திரேட் நூர் அசிரஃப் சோல்ஹானி இந்த வழக்கை விசாரிப்பார், அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் அஸ்ரீன் யாஸ் முகமது ரம்லி மற்றும் அதிபா சைபுல் பஹாரி ஆகியோர் வழக்குத் தொடருவார்கள்.

வழக்கறிஞர்கள் ராம் சிங், கமாருடின் முகமது சின்கி, திமோதி டாவூட், கிம்பர்லி யே வான்சுயின் மற்றும் சென் வென் ஜே ஆகியோர் லூவின் சார்பில் ஆஜராவார்கள். கடந்த பிப்ரவரியில், லீவ் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான 11 குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து விசாரணை கோரினார். மேலும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் இரண்டு நபர் உத்தரவாதங்களுடன் RM1,000 ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். Tenom மாஜ்ஸ்திரேட் என்பது சபாவின் உள்பகுதியில் உள்ள கோத்த கினாபாலுவிற்கு தெற்கே சுமார் 145 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version