Home மலேசியா அஸ்மின் அலிக்கு எதிராக கோம்பாக் மக்கள் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது கூட்டரசு நீதிமன்றம்

அஸ்மின் அலிக்கு எதிராக கோம்பாக் மக்கள் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது கூட்டரசு நீதிமன்றம்

புத்ராஜெயா, செப்டம்பர் 27 :

கோம்பாக் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தந்து கடமையை தவறியதாகவும், தனது தொகுதி மக்களை ஏமாற்றியதாகவும் கூறி, கோம்பாக் மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் தொடுத்த வழக்கு, இன்று கூட்டரசு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

மலாயாவின் தலைமை நீதிபதி டான்ஸ்ரீ அசாஹர் முகமட் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு, இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 27) அவர்களின் விண்ணப்பத்தை நிராகரித்தது.

காணொலி மூலம் நடத்தப்பட்ட நீதிமன்ற நடவடிக்கையில், வாக்காளர்கள் சார்பில் வழக்கறிஞர் கே.சண்முக, நான்கு சட்டக் கேள்விகளை முன்வைத்தார்.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், வழக்கை நிறுத்துவதற்கான முகமட் அஸ்மினின் விண்ணப்பத்தை நிராகரித்தது. அதனைத் தொடர்ந்து அவர் அந்த வழக்கிற்கு எதிராக மேன்முறையீடு செய்தார்.

முகமட் அஸ்மின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முஹமட் நிஜாமுடின் அப்துல் ஹமீட், அந்த வழக்கிலிருந்து அஸ்மினுக்கு விடுப்பு வழங்ககுமாறு கோரினார்.

அஸ்மின் தனது விண்ணப்பத்தில், இந்த வழக்கு கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 10 பிரிவு (1) (c) இன் கீழ் வழங்கப்பட்டுள்ள சங்க சுதந்திரத்திற்கான தனது அடிப்படை உரிமையை மீறுவதாக வாதிட்டார்.

இதனடிப்படையில், நீதிமன்றத்தின் ஏகோபித்த தீர்ப்பில், நீதிபதி அஜஹர், கூட்டரசு நீதிமன்றத்தை நிர்ணயிப்பதற்காக வாக்காளர்களின் வழக்கறிஞர் முன்மொழிந்த சட்டக் கேள்விகள், நீதித்துறைச் சட்டம் 1964 இன் பிரிவு 96ன் வரம்புத் தேவையை பூர்த்தி செய்யவில்லை என்று கூறியதுடன் அந்த வழக்கினையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version