Home மலேசியா ஷாஆலம் மேயர் எம்ஏசிசியால் கைதா? மறுக்கிறது MBSA

ஷாஆலம் மேயர் எம்ஏசிசியால் கைதா? மறுக்கிறது MBSA

ஷா ஆலம் நகராண்மைக்கழகத்தின் (MBSA)  மேயர் டத்தோ ஜமானி அகமது மன்சோர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (MACC) நகரத்தில் திட்டங்களுக்கான டெண்டர்கள் தொடர்பான விசாரணைக்காக கைது செய்யப்பட்டார் என்ற கூற்றை மறுத்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜமானி அகமது மன்சோர் விசாரணைக்கு உதவுவதற்காக கடந்த புதன் கிழமை MACC ஆல் அழைக்கப்பட்டதாக MBSA தெரிவித்துள்ளது.

ஷா ஆலம் மேயர் வியாழக்கிழமை (செப்டம்பர் 29) வழக்கம் போல் பணிக்குத் திரும்பினார். MBSA, எம்ஏசிசியின் விசாரணையில் தனது ஒத்துழைப்பை வழங்க எப்போதும் தயாராக உள்ளது என்பதை வலியுறுத்த விரும்புகிறது என்று அது கூறியது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் அதிகாரசபையின் அலுவலகத்தில் (PBT) நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, MBSA யில் திட்ட டெண்டர்களில் ஊழல் நடந்திருப்பதாக நம்பப்படும் ஒரு கார்டெல்லை எம்ஏசிசி கண்டுபிடித்ததாக நேற்று ஊடகங்கள் தெரிவித்தன.

எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஆசம் பாக்கி கூறுகையில், விசாரணைக்கு உதவுவதற்காக பல MBSA ஊழியர்கள் மற்றும் ஒரு மூத்த அதிகாரி உட்பட ஒன்பது நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Previous articleசுற்றுலா சங்கடத்தில் முடிந்த சம்பவம்
Next articleதும்பாட்டில் கடத்தப்பட்ட மலேசியப் பெண் பாதுகாப்பாக மீட்பு

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version