Home மலேசியா வீட்டில் குளித்தபோது மின்சாரம் தாக்கியதில் சகோதரர்கள் மரணம் -செப்பாங்கில் சம்பவம்

வீட்டில் குளித்தபோது மின்சாரம் தாக்கியதில் சகோதரர்கள் மரணம் -செப்பாங்கில் சம்பவம்

செப்பாங், அக்டோபர் 1 :

கம்போங் தெராஸ் ஜெர்னாங்கில் உள்ள தங்கள் வீட்டின் வளாகத்தில் ஒரு பேசினில் குளித்தபோது, 9 மற்றும் 10 வயதுடைய இரண்டு சகோதரர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (செப். 30) ​​நடந்ததாக செப்பாங் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் வான் கைமாறும் அஸ்ரான் வான் யூசூப் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டவர்கள் அக்குடும்பத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிள்ளைகளாவர்.

“பாதிக்கப்பட்டவரின் தந்தை அருகிலுள்ள கடைக்கு செல்வதற்கு முன், தனது இரண்டு மகன்களும் பேசினில் குளிப்பதைப் பார்த்தார். இருப்பினும், அவர் திரும்பி வந்து பார்த்தபோது, ​​​​தனது மகன்கள் மூச்சுவிடாமல் இருப்பதைக் கண்டார்,” என்று அவர் சனிக்கிழமை (அக். 1) தொடர்பு கொண்டபோது கூறினார்.

தனது மகன்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை தந்தை உணர்ந்ததாக அவர் கூறினார்.

“மின்சாரம் அருகிலுள்ள உலோகத்திலானான துணி மாட்டியிலிருந்து (metal cloth hanger) பரவியதாக நம்பப்படுகிறது.

தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) வீட்டின் பக்கத்திலுள்ள கம்பிக்கும் வீட்டின் மின்சார இணைப்பிற்கு (house’s zinc) இடையே உராய்வு ஏற்பட்டதால் மின்சாரம் பாய்ந்தது என்பதை உறுதிப்படுத்தியது.

“இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக செர்டாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version