Home Top Story காம்பியாவில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக 66 குழந்தைகள் பலி; இந்திய இருமல் மருந்து காரணமா?

காம்பியாவில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக 66 குழந்தைகள் பலி; இந்திய இருமல் மருந்து காரணமா?

ஜெனீவா, அக்டோபர் 6:

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தனர். இதற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரமற்ற 4 இருமல் மருந்துகள் காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், நச்சுத்தன்மை கொண்ட இந்த மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு வெளியிலும் விநியோகம் செய்யப்பட்டிருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

காம்பியா நாட்டில் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் 66 குழந்தைகளின் உயிரிழப்பிற்கும் இந்த 4 மருந்துகளுக்கும் தொடர்பிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நச்சுத்தன்மை கொண்ட இந்த இருமல் மருந்துகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காம்பியா நாட்டில் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் 66-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்கு இந்த மருந்துடனான தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது’

இந்தியாவில் உள்ள மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் என்ற மருந்து நிறுவனத்தால் இந்த 4 இருமல் மற்றும் சளி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஅக்டோபர் 9 அன்று பிரிக்ஃபீல்ட்ஸைச் சுற்றியுள்ள சாலை மூடப்படும்
Next articleவசதி குறைந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கும் Peranti Siswa மடிக்கணினிகள் குறைக்கப்பட்டது ஏன்?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version