Home இந்தியா குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடைய இருமல் மருந்துகள்; மலேசியாவில் பதிவு செய்யப்படவில்லை

குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடைய இருமல் மருந்துகள்; மலேசியாவில் பதிவு செய்யப்படவில்லை

காம்பியாவில் 66 குழந்தைகளின் மரணத்திற்கு வழிவகுத்த இந்தியாவின் மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மற்றும் காய்ச்சல் மருந்து பொருட்கள் மலேசியாவில் பதிவு செய்யப்படவில்லை என்று டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகிறார்.

தேசிய மருந்தக ஒழுங்குமுறைப் பிரிவின் (NPRA) தரவுத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் promethazine oral solution, kofexmalin baby cough syrup, makoff baby cough syrup and magrip N cold syrup ஆகியவற்றுக்கான பதிவுகள் எதுவும் இல்லை என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் கூறினார்.

இந்தியாவில் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்த நான்கு இருமல் மற்றும் சளி மருந்துகள் குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது. அசுத்தமான மருந்துகள் மேற்கு ஆபிரிக்க நாட்டிற்கு வெளியே விநியோகிக்கப்பட்டிருக்கலாம். உலகளாவிய வெளிப்பாடு “சாத்தியமானது” என்றும் UN சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version