Home மலேசியா கெடாவிலுள்ள நான்கு ஆறுகளின் நீர் மட்டம் எச்சரிக்கை அளவை தாண்டியுள்ளது

கெடாவிலுள்ள நான்கு ஆறுகளின் நீர் மட்டம் எச்சரிக்கை அளவை தாண்டியுள்ளது

அலோர் ஸ்டார், அக்டோபர் 9 :

கெடா மாநிலத்தின் கோத்தா ஸ்டார் மற்றும் பத்தாங் தெராப் ஆகிய மாவட்டங்களில் உள்ள நான்கு ஆறுகளின் நீர் மட்டம் இன்று எச்சரிக்கை அளவைத் தாண்டியுள்ளது.

மலேசிய குடிமைத் தற்காப்புப் படையின் கெடாவின் செயலகப் பிரிவின் தலைவர், பேரிடர் மேலாண்மைக் குழு, மேஜர் முஹமட் சுஹைமி முகமது ஜைன் கூறுகையில், சம்பந்தப்பட்ட நான்கு ஆறுகள், பாடாங் தெராப் சர்க்கரை ஆலையில் உள்ள சாரி ஆறு, ஜானிங் ஆறு என்பனவும் கம்போங் லபி பாடாங் தேராப், கம்போங் குபுவில் உள்ள படாங் தேராப் ஆறு மற்றும் TAR பாலத்தில் உள்ள சுங்கை அனாக் புக்கிட் என்பனவும் எச்சரிக்கை அளவைத் தாண்டியுள்ளன என்றும் அவர் கூறினார்.

“முன்கூட்டிய தயார்நிலையை உறுதிசெய்ய, மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளும் ஒவ்வொரு மணி நேரமும் APM உறுப்பினர்களால் அவ்வப்போது கண்காணிப்பு செய்யப்படும்.

மேலும் “எந்தவொரு நிகழ்வுக்கும் தயார்படுத்துவதற்காக APM உறுப்பினர்கள் தண்ணீரில் மூழ்கக்கூடிய இடங்கள் என நம்பப்படும் பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version