Home மலேசியா பினாங்கு DAP உறுப்பினர்கள் அவசர கூட்டம்

பினாங்கு DAP உறுப்பினர்கள் அவசர கூட்டம்

ஜார்ஜ் டவுன், அக்டோபர் 10 :

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பினாங்கு DAP கட்சித் தலைவர்கள் அனைவரும் ஜாலான் ரங்கூனில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் ஒன்றுகூடியுள்ளனர்.

பினாங்கு முதல்வரின் சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி லே கோக் பெங் மற்றும் பினாங்கு DAP செயலாளர் லிம் ஹுய் யிங் உட்பட 25 தலைவர்களும் திங்கள்கிழமை (அக்டோபர் 10) மாலை 5.30 மணிக்கு DAP தலைமையகத்திற்கு வரத் தொடங்கினர்.

இருப்பினும், DAP தலைவர் லிம் குவான் எங், பாகன் எம்.பி மற்றும் ஆயிர் பூத்தே சட்டமன்ற உறுப்பினரும் கலந்து கொள்ளவில்லை.

இந்தக் கூட்டம் மாலை 6.15 மணியளவில் தொடங்கியது.

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று முன்னதாக, நாடாளுமன்றத்தை கலைக்க மன்னர் தனது முறையான ஒப்புதல் அளித்துள்ளார், அத்தோடு 15வைத்து பொதுத்தேர்தல் 60 நாட்களுக்குள் நடத்தபட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

பினாங்கு, கெடா, சிலாங்கூர் மற்றும் நெக்ரி செம்பிலான் ஆகியவை GE15 உடன் சேர்த்து ஒரே நேரத்தில் மாநிலத் தேர்தல்களை நடத்தப் போவதில்லை என்று கூறியதாக அறியமுடிகிறது.

பினாங்கில் 13 நாடாளுமன்றத் தொகுதிகளும், கெடாவில் 15 நாடாளுமன்றத் தொகுதிகளும் , சிலாங்கூர் 22 நாடாளுமன்றத் தொகுதிகளும் மற்றும் நெகிரி செம்பிலானில் 8 நாடாளுமன்றத் தொகுதிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version