Home Top Story ஆஸ்திரேலியாவில் கனமழையுடன் கூடிய மோசமான வானிலை தொடர்கிறது

ஆஸ்திரேலியாவில் கனமழையுடன் கூடிய மோசமான வானிலை தொடர்கிறது

சிட்னி, அக்டோபர் 23 :

ஆஸ்திரேலியா தொடர்ந்து மூன்றாவது முறையாக லா நினா வானிலை நிகழ்வை எதிர்கொண்டுள்ளதால், தெற்கு மற்றும் கிழக்கு ஆஸ்திரேலியாவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் கனமழை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் ஒரு வாரமாக வெள்ள அபாய நிலை நீடித்து வருவதாக ஆஸ்திரேலியாவின் சேனல் நியூஸ் ஏசியா செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.

இந்த வெள்ளம் இன்றுவரை ஐந்து உயிர்களைக் காவுகொண்டுள்ளது மற்றும் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

“எதிர்வரும் 24 மணி நேரத்திற்குள் கனமழை மற்றும் ஆபத்தான திடீர் வெள்ளத்தை கொண்டு வரும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக” ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர், இந்த வெள்ளத்தில் லிஸ்மோர் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக இருந்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version