Home Top Story நடிகரை காதலிக்க கூடாது – ஜான்வி கபூர்

நடிகரை காதலிக்க கூடாது – ஜான்வி கபூர்

தென்னிந்திய படங்களிலும், இந்தி திரையுலகிலும் புகழ்பெற்ற கதாநாயகியாக விளங்கிய மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் வெற்றி பெற்ற ஹெலன் படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து பாராட்டு பெற்றார்.

தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக் ஆன குட்லக் ஜெர்ரி படத்திலும் நடித்துள்ளார். இவரது தந்தை போனிகபூர் தமிழில் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தயாரித்துள்ளார். தற்போது துணிவு படத்தை தயாரித்து வருகிறார். ஜான்வி கபூரின் தங்கை குஷி கபூரும் சினிமாவில் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார்.

ஜான்வி கபூரிடம் சினிமாவில் நடிக்க வரும் உங்கள் சகோதரி குஷிக்கு என்ன அறிவுரை சொல்வீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து ஜான்வி கபூர் கூறும்போது, ”நடிகரை மட்டும் காதலிக்க கூடாது என்று சொல்லுவேன். முதலில் உன் மதிப்பு என்ன என்பதை தெரிந்து கொள். அதுவே உன்னை வழி நடத்தும். சினிமா நடிகை என்று வந்துவிட்ட பிறகு பலர் விமர்சனம் செய்யலாம். அதை கண்டு கொள்ளக் கூடாது என்றெல்லாம் அறிவுரை சொல்வேன்” என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version