Home மலேசியா நாளைய வேட்புமனு தாக்கலின் போது சுமார் 31,000 உறுப்பினர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர் – காவல்துறை

நாளைய வேட்புமனு தாக்கலின் போது சுமார் 31,000 உறுப்பினர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர் – காவல்துறை

கோலாலம்பூர், நவம்பர் 4 :

15வது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தினமான சனிக்கிழமை (நவம்பர் 5) பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, நாடு முழுவதும் சுமார் 31,000 உறுப்பினர்களுடன் ஆளில்லா விமானங்களையும் பணியில் ஈடுபடுத்தவுள்ளதாக புக்கிட் அமான் உள்ளக பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை இயக்குனர், ஆணையர், டத்தோஸ்ரீ ஹசானி கசாலி தெரிவித்தார்.

“வேட்புமனு தாக்கல் செய்யும் போது, பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் நாளை சீருடை மற்றும் சாதாரண உடை அணிந்த 31,183 பணியாளர்கள் இக்கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் காவல்துறை உறுப்பினர்களைத் தவிர, நிலைமையைக் கண்காணிக்க எங்கள் ட்ரோன் பிரிவுகளையும் நாங்கள் பயன்படுத்துவோம்” என்று போலீஸ் படையின்15வது பொதுத் தேர்தல் செயல்பாட்டு இயக்குநராக இருக்கும் ஹசானி மேலும் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version