Home மலேசியா அம்பாங் தொகுதியில் 9 முனைப் போட்டி

அம்பாங் தொகுதியில் 9 முனைப் போட்டி

அம்பாங்: 2008ல் முதன்முதலில் வெற்றி பெற்ற அம்பாங் நாடாளுமன்றத் தொகுதியைக் காக்க, பார்ட்டி பங்சா மலேசியா தலைவர் ஸுரைடா கமருடின் ஒன்பது முனைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் கடந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் அம்பாங் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஆனால் 2020ல் ஷெரட்டன் நகர்வை அடுத்து பிகேஆரிலிருந்து நீக்கப்பட்ட பிறகு பெர்சத்துவில் சேர்ந்தார்.

 ஸுரைடா, பக்காத்தான் ஹராப்பானின் ரோட்சியா இஸ்மாயில், மேலும், பாரிசான் நேசனலின் ஐவோன் லோ, பெரிகாத்தான் நேஷனலின் சாஷா லினா அப்துல் லத்தீப், பெஜுவாங்கின் நூருல் அஷிகின் மபாஹ்வி மற்றும் வாரிசானின் லை வை சோங் ஆகியோர் களத்தில் உள்ளனர். மூன்று சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்; Tan Hua Meng, Shafiq Izwan Yunos மற்றும் M ரவீந்திரன்.

இங்குள்ள டத்தோ அகமட் ரஸாலி மண்டபத்தில் காலை 10 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிவடைந்த பின்னர், ஒன்பது பேரும் வேட்பாளர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டதை தேர்தல் அதிகாரி ஃபௌசி யாதிம் உறுதிப்படுத்தினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version