Home Top Story GE15 : BN இன் அறிக்கையானது அனைவருக்கும் நன்மையை தரும் என்கிறார் ஜாஹிட்

GE15 : BN இன் அறிக்கையானது அனைவருக்கும் நன்மையை தரும் என்கிறார் ஜாஹிட்

15வது பொதுத் தேர்தலுக்கான (GE15) தேசிய முன்னனிக் கட்சியின் (BN) அறிக்கையானது மக்களின் நல்வாழ்வு, நிலையான பொருளாதார வளர்ச்சி, அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி  கூறினார்.

குறிப்பாக  B40 மற்றும் M40 மற்றும் T20 ஆகியவை   சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவினருக்கும்  நன்மை அளிக்கும்  என்றார். மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும்  மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தாத நடவடிக்கை, அந்நிய நேரடி முதலீடு (FDI) மற்றும் உள்நாட்டு நேரடி முதலீட்டை தொடர்ந்து ஈர்க்க விரும்புகிறோம். அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், ஏற்றுமதி மதிப்பை அதிகரிக்கவும் எங்கள் கட்சி முன்னுரிமை தரும் என்றார்

பாகன் டத்தோ நாடாளுமன்றத் தொகுதியைப் பாதுகாக்கும் ஜாஹிட், இங்குள்ள கம்போங் சுங்கை நிபா தாராத் வாக்குச் சாவடி மாவட்ட மையத்திற்குச் சென்ற போது தேசிய முன்னனி கட்சியின் அறிக்கை நாளை சமூக ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு மூலம் வெளியிடப்படும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version