Home மலேசியா ஈப்போவில் ஹாக்கி திறன் பயிற்சியில் கலந்து கொண்ட 14 சிறுவன், பயிற்சி முகாமில் உயிரிழந்தார்

ஈப்போவில் ஹாக்கி திறன் பயிற்சியில் கலந்து கொண்ட 14 சிறுவன், பயிற்சி முகாமில் உயிரிழந்தார்

ஈப்போ, நவம்பர் 7 :

இங்குள்ள ராயா அஷ்மான் ஷா ஹாக்கி அக்காடமியில் (NHDP) கோல்கீப்பர் திறன் பயிற்சியில் கலந்து கொண்ட, தேசிய ஹாக்கி மேம்பாட்டுத் திட்டத்தின் 14 வயது பயிற்சியாளர் ஒருவர், நேற்று பேராக் தேசிய விளையாட்டு கவுன்சில் (NSC) விடுதியில் உயிரிழந்த சம்பம் பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

NSC டைரக்டர் ஜெனரல் டத்தோ அஹ்மட் ஷபாவி இஸ்மாயில் கூறுகையில், 14 வயதான பில் வொல்ப்சன் அனாக் லியானி, என்ற சிறுவன் அசௌகரியம் மற்றும் மயக்கம் வருவதாக கூறியதாகவும், காலை 7 மணியளவில் திடீரென தனது அறையில் சரிந்து விழுந்தார் எனவும் கூறினார்.

“அவர்கள் உடனே ஆம்புலன்ஸை அழைத்து பாதிக்கப்பட்டவரை உடனடியாக ராயா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

“அவருக்கு ஆரம்ப உதவிகள் மற்றும் தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, மேலும் இதுவரை மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை” என்று அஹ்மட் ஷபாவி கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version