Home மலேசியா அம்னோ இளைஞர் பிரிவு கைரியை துணைப் பிரதமர் பதவிக்கு பரிந்துரை

அம்னோ இளைஞர் பிரிவு கைரியை துணைப் பிரதமர் பதவிக்கு பரிந்துரை

15வது பொதுத் தேர்தலில் (ஜிஇ15) பாரிசான் நேஷனல் வெற்றி பெற்றால், கைரி ஜமாலுதீனை துணைப் பிரதமர் பதவிக்கு  நிறுத்தலாம் என்று அம்னோ இளைஞர் பிரிவு  பரிந்துரைத்துள்ளது.  அத்தகைய அறிவிப்பு தேர்தலில் பிஎன் கட்சியின்  மகத்தான வெற்றியை உறுதி செய்யும் என்று டத்தோ முகமட் முகராபின் மொக்தாருடின் கூறினார்.

கைரிக்கு சுங்கை பூலோவில் நல்ல வரவேற்பு உள்ளது.  சுங்கை பூலோவில் உள்ள தாமன் சௌஜானா உத்தாமாவில் நடந்த  கூட்டத்தில்  நாட்டை நல்ல முறையில் வழி நடத்தவும்,   பிரதமராக வருவதற்கும்  தான்  தயாராக இருப்பதாக கைரி  கூறியுள்ளர். பிகேஆர் கோட்டையில் கைரி ஆர். ரமணனை எதிர்கொள்கிறார்.  நாட்டின் அரசியலில்  இளைஞர்கள் ஒரு மாற்றத்தைக் காண விரும்புவதால், கைரி போன்ற இளம் தலைவர்களுக்கு வாய்ப்பளிக்க  வேண்டும் என்று முகராபின்  கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், கைரியை  துணைப் பிரதமராக  வைப்பதில் உறுதியாக இருந்தால்  பிஎன் பெரிய வெற்றியைப் பெறும். நாட்டிற்கு திறமையான தலைவர் தேவைப்படுவதே இதற்குக் காரணம்  என்றார்.

ஷாரில் ஹம்தான், டத்தோ டாக்டர் அசிரஃப் வாஜ்டி டுசுகி, தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜீஸ், டத்தோ ஹஸ்முனி ஹசன் போன்ற புதிய முகங்களுடன், பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும்,  நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும்  பிஎன்க்கு மக்கள் வாய்ப்பு அளிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version