Home மலேசியா தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான தேவைகளை முன்னிறுத்திய தன் மனைவியை பாராட்டினார் முஹிடின்

தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான தேவைகளை முன்னிறுத்திய தன் மனைவியை பாராட்டினார் முஹிடின்

 பெரிகாத்தான் நேஷனல் தலைவர் முஹிடின் யாசின் தனது மனைவி நூரைனி அப்துல் ரஹ்மானுக்கு புகழாரம் சூட்டினார், அவருடைய தியாகங்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான சில முயற்சிகளுக்கு உத்வேகம் அளித்தன.

நூரைனி தனக்கு பலமாக இருந்ததாக முன்னாள் பிரதமர் கூறினார். அரசியலில் தனது எழுச்சி மற்றும் வீழ்ச்சி மற்றும் புற்றுநோய்க்கு எதிரான  போர் என ஒவ்வொரு நிலையிலும்  ”ஒரு பெண்ணின் விசுவாசத்தையும் தியாகத்தையும் பாராட்ட எனக்கு கற்றுக் கொடுத்தது” என்று  பேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.

பிஎன் தனது தேர்தல் வாக்குறுதிகளை வரையும்போது, ​​அது ஒருபொழுதும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தவறியதில்லை  என்றார் முஹிடின். பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டங்களை இயற்றுதல், நம் நாட்டின் தாய்மார்களுக்கு வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை, நெகிழ்வான வேலை நேரம் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு RM1,000 வரி விலக்கு உள்ளிட்ட 14 முயற்சிகளின் விளக்கப்படத்தையும் அவர் தேர்தல் அறிக்கையில் பதிவேற்றினார்.

மேலும் பொதுத் தேர்தலில்  வெற்றிப் பெற்றால் ஐந்து ஆண்டுகளில் ஒரு மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும், குறைந்த வட்டி விகிதத்தில் உணவுக்காக RM1 பில்லியன் நிதியை அளிக்க  PN உறுதியளித்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version