Home மலேசியா நாட்டின் பொருளாதாரம் 14.2% வளர்ச்சியை அடைந்துள்ளது

நாட்டின் பொருளாதாரம் 14.2% வளர்ச்சியை அடைந்துள்ளது

நாட்டின்  பொருளாதாரம் தொடர்ந்து வலுவடைந்து  இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில்  14.2% வளர்ச்சியைப் பதிவுசெய்தது. இது முந்தைய காலாண்டில் 8.9% ஆக இருந்தது என்றும்  பேங்க் நெகாரா  அறிவித்தது.  BNM கவர்னர் நோர் ஷம்சியா முகமட் யூனுஸ் ஊடகங்களுக்கு வழங்கிய  பொருளாதார அறிக்கையில் மூன்றாவது காலாண்டில்   அனைத்து துறைகளிலும் பொருளாதார நடவடிக்கைகள்  விரிவாக்கம்  செய்யப்பட்டுள்ளது என்றார்

உள்நாட்டு தேவையின் தொடர்ச்சியான விரிவாக்கம், தொழிலாளர் சந்தையில் உறுதியான மீட்சி, வலுவான மின் மற்றும் மின்னணுவியல் (E&E)உற்பத்தி  மற்றும்  ஏற்றுமதியில்  தற்போதைய கொள்கை  ஆகியவை இந்த வளர்ச்சிக்கு வழிவகுத்தது. முந்தைய காலாண்டில் 12% ஆக இருந்த சேவைத் துறை 16.7% விரிவாக்கத்தைக் கண்டது. சிறிய அளவிலான திட்டங்களில் தொடர்ந்த முன்னேற்றம் காரணமாக கட்டுமானத் துறையானது, Q2 இல் 2.4% இலிருந்து Q3 இல் 15.3% ஆக மிக முக்கியமான விரிவாக்கத்தைக் கண்டது.

அதிக அளவிலான எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியானது சுரங்கத் துறையில் கணிசமான மீட்சிக்கு முக்கிய உந்து சக்தியாக இருந்தது.  இது இரண்டாம் காலாண்டில் 0.5% இறக்கத்திலிருந்து  Q3 இல் 9.2% வளர்ச்சியைக் கண்டது. பொது நுகர்வு Q2  உடன் ஒப்பிடும்போது 2.6% இல் இருந்து  4.5% உயர்ந்தது.

முதலீடுகளும் அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. தனியார் முதலீட்டு வளர்ச்சி Q2 இல் 6.3% லிருந்து   13.2% ஆக உயர்ந்தது. கட்டமைப்புகள் மற்றும் M&E முதலீடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டது.  அரசு மற்றும் பொது நிறுவனங்களின் அதிக மூலதனச் செலவுகள் காரணமாக,பொது முதலீடு  Q3 இல் 13.1% விரிவடைந்தது.  நாடு நிகர ஏற்றுமதியில் மீட்சியைப் பதிவு செய்தது. இது முந்தைய மூன்று மாதங்களில் 28.7%  இருந்து மூன்றாவது காலாண்டில் 18.7% வளர்ந்ததுள்ளது.

மூன்றாம்  காலாண்டில் மொத்தப் பணவீக்கம் உச்சத்தை எட்டியுள்ளயது என்றும், உலகளாவிய பொருட்களின் விலைகள் மற்றும் விநியோகத்  தளர்வுகளுக்கு ஏற்ப முன்னோக்கிச் செல்வது மிதமானதாக இருக்கும் என்றும் பிஎன்எம் கூறியது.

அமெரிக்க டாலருக்கு நிகரான  ரிங்கிட் மதிப்பு  இன்று 4.6360/4.6405 இல் துவங்கியது, நேற்றைய முடிவில் 4.6950/4.6990 ஆக இருந்தது.   இது  உலக நிதிச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்துடன்  தொடர்புடையது என்று  BNM கூறியது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version