Home Top Story சீனாவில் அதிகரிக்கும் கொரோனா : 14000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா : 14000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை  ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் அங்கு 11,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிக பாதிப்பு எண்ணிக்கை ஆகும். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 14,878 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 13,167 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது. மேலும்  இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,71,968 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleமலேசியக் குடும்ப அரசாங்கம் – கொள்கை குறித்து ஓர் ஆய்வு
Next articleதெலுக் இந்தானில் வெள்ளம்; 2 பிபிஎஸ் திறக்கப்பட்டது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version