Home மலேசியா அரசியல் செப்பாங்கில் மொத்தம் 1,850 போலீஸ் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்கூட்டிய வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

செப்பாங்கில் மொத்தம் 1,850 போலீஸ் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்கூட்டிய வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

செப்பாங், நவம்பர் 15 :

15வது பொதுத் தேர்தலுக்கான (GE15) முதற்கட்ட வாக்குப்பதிவில் செப்பாங்கில் உள்ள இரண்டு மாவட்ட காவல்துறை தலைமையகங்களின் மொத்தம் 1,850 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் இன்று முன்கூட்டிய வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

செப்பாங் GE15 -P113 நிர்வாக அதிகாரி, டத்தோ அப்துல் ஹமீட் ஹூசைனின் கூற்றுப்படி, இந்த முன்கூட்டிய வாக்களிப்பு செயல்முறை செப்பாங் காவல்துறை தலைமையகம் மற்றும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலுள்ள (KLIA) காவல்துறை தலைமையகம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படுகிறது, இருப்பினும் போலீஸ்காரர்களில் சிலர் ஏற்கனவே கடந்த வாரம் தபால் மூலம் வாக்களித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இன்று வானிலை மிகவும் நன்றாக இருந்ப்பதாலும் வாக்களிப்பு செயல்முறை காலை 7 மணிக்கே ஆரம்பித்துவிட்டதாலும், இந்த முறை போலீஸ்காரர்கள் வருகை மற்றும் வாக்களிப்பு 70 விழுக்காட்டை எட்டும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அங்கு செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version