Home மலேசியா இன்று மீண்டும் இன்வோக்கில் MACC சோதனை: ரஃபிஸி தகவல்

இன்று மீண்டும் இன்வோக்கில் MACC சோதனை: ரஃபிஸி தகவல்

மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (MACC) இன்வோக் சொல்யூஷன்ஸ் Sdn Bhd என்ற தனது தரவு நிறுவனத்தில்  மீண்டும்  இன்று சோதனை நடத்தியதாக பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி கூறினார்.  MACC இரண்டாவது முறையாக இன்வோக்கை  சோதனை செய்கிறது  என்று ரஃபிஸி ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

தரவு நிறுவனம் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக சுங்கத் துறை விரைவில்  அலுவலகத்திற்கு வரும் என்று  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்தார். இன்வோக்கின் அனைத்து ஆவணங்களும்  MACC ஆல் கைப்பற்றப்பட்டதாகவும் அவரது ஊழியர்கள் ஏழு மணி நேரம் வரை விசாரிக்கப்பட்டதாகவும்  கூறினார்.

நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு சென்னும் நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கும் அவருக்கும் சொந்தமானது என்றார்.  அக்டோபர் 31 இல் ரஃபிஸி நிகர சொத்து மதிப்பு  RM18,851,350  என்று அறிவித்திருந்தார்.  கடந்த வாரம் முதல் ரஃபிசியின் சொத்து விவரத்தை MACC விசாரித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.

Previous articlePH உடன் GPS இணைவது கடினம் : சரவாக் DAP தலைவர்
Next articleGE15: பாடாங் செராய் PH வேட்பாளர் கருப்பையா முத்துசாமி காலமானார்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version