Home Hot News பெர்லிஸ் : 14 தொகுதிகளைக் கைப்பற்றி பெரிக்காத்தான் நேஷனல் மாநில அரசாங்கத்தை அமைக்கிறது

பெர்லிஸ் : 14 தொகுதிகளைக் கைப்பற்றி பெரிக்காத்தான் நேஷனல் மாநில அரசாங்கத்தை அமைக்கிறது

கங்கார் : யாரும் எதிர்பாராத அளவுக்கு வெற்றிகளை நாடு முழுவதும் பதிவு செய்திருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி, பெர்லிஸ் மாநிலத்தில் அபார வெற்றியைப் பெற்றிருக்கிறது.

மொத்தமுள்ள 15 சட்டமன்றத் தொகுதிகளில் 14-ஐ பெரிக்காத்தான் கூட்டணி பெற்றுள்ளது. இண்ட்ரா காயாங்கான் சட்டமன்றத் தொகுதியை மட்டும் பக்காத்தான் ஹாரப்பான் கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து பெர்லிஸ் மாநிலத்தில் தனிப் பெரும்பான்மை பெற்று பெரிக்காத்தான் ஆட்சி அமைக்கிறது. முதன் முறையாக பெர்லிஸ் மாநில அரசாங்கத்தை பெரிக்காத்தான் கூட்டணி கட்டமைக்கிறது.

மேலும் பெர்லிஸ் மாநிலத்திலுள்ள 3 நாடாளுமன்றத் தொகுதிகளையும் பெரிக்காத்தான் கைப்பற்றியிருக்கிறது. அம்னோவிலிருந்து வெளியேறி போட்டியிட்ட ஷாஹிடான் காசிம் ஆராவ் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version