Home உலகம் உலகக் கோப்பை கால்பந்து: ஈரானை வீழ்த்தியது இங்கிலாந்து

உலகக் கோப்பை கால்பந்து: ஈரானை வீழ்த்தியது இங்கிலாந்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நவம்பர் 20 ம் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி  நடைபெற்று வருகிறது.   இதில் நேற்று  இங்கிலாந்து மற்றும் ஈரான் அணிகள் மோதின.  ஆட்டத்தின்  தொடக்கத்தில் இங்கிலாந்து அணி  3 கோல்கள் அடித்து ஆதிக்கம் செலுத்தியது. பின்னர்  இரண்டாம்  பாதியில் மேலும் 3 கோல்கள் அடித்து அசத்தியது. ஆனால் ஈரான் அணியால்  இரண்டு கோல்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.  இந்நிலையில் ஆட்டத்தின்  இறுதியில்  6-2 என்ற கோல் கணக்கில் ஈரானை இங்கிலாந்து  வீழ்த்தியது.

நேற்று இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் அமெரிக்கா, வேல்ஸ் அணிகள் மோதின.  அமெரிக்க அணி  தொடக்கம் முதலே சிறப்பாக ஆடியது.   முதல் பாதியின் 36-வது நிமிடத்தில் அமெரிக்க அணியின் திமுதி வியா ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் அமெரிக்கா 1-0 என முன்னிலை வகித்தது.

இந்நிலையில்  ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் (82-வது நிமிடத்தில்) கிடைத்த பெனால்டி வாய்ப்பின் மூலம்   வேல்ஸ் வீரர் பாலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி   கோலாக மாற்றினார்.  இறுதியில் இரு அணிகளுக்கும்  இடையிலான  ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version