Home மலேசியா பழங்குடிச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கட்டுமான தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை, 2...

பழங்குடிச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கட்டுமான தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை, 2 பிரம்படி

கோல திரெங்கானு, நவம்பர் 23 :

பழங்குடிச் சிறுமிக்கு உடல்ரீதியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், கட்டுமானத் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் இரண்டு பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்தது.

குற்றம் சாட்டப்பட்ட தாஹர் முகமட் அபு, 55, என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டில், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, நீதிபதி நூரியா ஒஸ்மான் இந்த முடிவை எடுத்தார்.

குற்றச்சாட்டின்படி, சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட ஐந்து வயதுடைய சிறுமிக்கு எதிராக உடல் ரீதியான பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த 24 டிசம்பர் 2019 அன்று இரவு 7 மணியளவில் இந்த மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் குற்றம் செய்ததாக, குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14 (a) இன் படி குற்றம் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

2019 டிசம்பர் 28-ம் தேதி முதல் சிறை தண்டனையை தொடங்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version