Home மலேசியா கார் கழுவும் இடத்தில் கொள்ளை; சில மணி நேரத்தில் கொள்ளையனை பிடித்து போலீஸ் அதிரடி

கார் கழுவும் இடத்தில் கொள்ளை; சில மணி நேரத்தில் கொள்ளையனை பிடித்து போலீஸ் அதிரடி

காஜாங், நவம்பர் 27 :

இங்குள்ள கார் கழுவும் இடத்தில் நடந்த கொள்ளை தொடர்பில், குற்றம் நடந்த சில மணி நேரங்களிலேயே சந்தேக நபரை கைது செய்யததன் மூலம் போலீசார் ஒரே நாளில் அந்த வழக்கிற்கு தீர்வு கண்டனர்.

“இம்பியான் முர்னி தாமான் சௌஜானாவில் உள்ள கார் கழுவும் இடத்தில் நடந்த சம்பவத்தில், சந்தேக நபர் ஒரு ஆண் மற்றும் பெண்ணிடம் இருந்து 500 ரிங்கிட் பணத்தை கொள்ளையடித்துள்ளார்.

“குறித்த சம்பவம் தொடர்பில், நேற்று சனிக்கிழமை (நவம்பர் 26) இரவு 7.15 மணியளவில் காவல்துறையில் புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டது,” என்று காஜாங் மாவட்ட காவல்துறை தலைவர் முகமட் ஜெய்ட் ஹாசன் கூறினார்.

கொள்ளை வழக்குடன் தொடர்பான சந்தேக நபரை தாமான் கண்டாய் பேர்மையில் வைத்து நேற்று இரவே காவல்துறையினர் கைது செய்தனர் என்றும் சந்தேக நபருக்கு ஏற்கனவே இரு குற்றவியல் குற்றங்கள் இருப்பதாக சோதனையில் கண்டறியப்பட்டது என்றும் அவர் மெத்தாம்பேட்டமைனுக்கு நேர்மறையான பதிலைப் பெற்றார் என்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 27) அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் அவரிடமிருந்து திருட்டுக்குப் பயன்படுத்திய ஆடைகள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

அத்தொடு சமூக ஊடகங்களில் சிலர் கூறியது போல், சந்தேக நபர் போலீஸ்காரர் போல் நடிக்கவில்லை என்று ஏசிபி முகமட் ஜைட் தெளிவுபடுத்தினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version