Home மலேசியா தேசிய முன்னணி வேட்ப்பாளரின் வெற்றிக்கு ‘வழி விடுவதாகக் கூறிய’ PH வேட்பாளரின் பெயர் தியோமான்...

தேசிய முன்னணி வேட்ப்பாளரின் வெற்றிக்கு ‘வழி விடுவதாகக் கூறிய’ PH வேட்பாளரின் பெயர் தியோமான் வாக்குச்சீட்டில் பட்டியலிடப்படும்

ரொம்பின், நவம்பர் 29 :

தியோமான் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்ப்பாளரின் வெற்றிக்கு ‘வழி விடுவதாகக் கூறிய பக்காத்தான் ஹராப்பான் (PH) வேட்பாளர் முகமட் ஃபட்ஸ்லி முகமட் ரம்லியின் பெயர், தியோமான் தேர்தலுக்கான வாக்குச் சீட்டில் இடம்பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பில் கருத்துரைத்த பகாங் தேர்தல் ஆணையத்தின் (EC) இயக்குனர் டத்தோ ஜம்ரி ஹம்லி, வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு வேட்பாளர்களின் நிலையை மாற்ற முடியாது என்றும் பக்காத்தான் ஹராப்பான் வேட்ப்பாளர் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடலாம் என்றும் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவின் போது வாக்காளர்களும் அவருக்கு வாக்களிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

“தேர்தல் வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கான இடத்தை மட்டுமே தேர்தல் ஆணையம் வழங்குகிறது. மற்றவர்களுக்கு வழி விடும் அவர்களின் முடிவு அவர்களின் சொந்த அரசியல் கருத்தின் அடிப்படையிலானது, ”என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version