Home மலேசியா புதர்களுக்கிடையே தலையில் காயங்களுடன் ஆடவர் சடலம்

புதர்களுக்கிடையே தலையில் காயங்களுடன் ஆடவர் சடலம்

ஷா ஆலம் பகுதியில்  நேற்று   தஞ்சோங் கராங்கின் முன்னால் மேலாண்மை நிறுவனம்  (INSTITUTE OF FORMER MANAGEMENT) அருகே புதர்களினிடையே    தலையில் காயங்களுடன்  வெளிநாட்டவர் என்று நம்பப்படும் ஒரு ஆணின் சடலம்  கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து   அங்கிருந்த பொதுமக்கள்   காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர்.  தகவலறிந்த   காவல் துறையினர்  சம்பவ இடத்திற்கு சென்ற போது,     தலையில் காயங்களுடன்  40 வயதுடைய ஆணின் சடலம் புதருக்குள்     இருந்து  கண்டெடுக்கப்பட்டது என  கோலா சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ட் ராம்லி காசா தெரிவித்தார்.   பாதிக்கப்பட்டவர் வெளிநாட்டவர் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் அவரது உடலில் பிசிஜி தடுப்பூசியின் அறிகுறிகள் எதுவும் இல்லை.

சுமார் 3 மீ தொலைவில்  ஒரு வெள்ளை மோடெனாஸ் மோட்டார் சைக்கிள் இருந்தது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் நடத்திய விசாரணையின் முடிவுகளில்,  பாதிக்கப்பட்டவரின் மரணம் சமூக விரோத கும்பலால் ஏற்பட்டிருக்கலாம் என்றும், உடல் பிரேத பரிசோதனைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்றும் கூறினார்.

கொலைக்கான தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று சுப்ட் ரம்லி கூறினார்.

Previous articleஅதிகரித்த கோவிட் தொற்று; இறப்பு10- பாதிப்பு 1,672- மீட்பு 2,722
Next articleசெப்பாங்கில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 103 பேர் இரண்டு வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version