Home இந்தியா நயன்தாரா நடித்துள்ள ‘கனெக்ட்’ படத்தின் டிரைலர் அப்டேட்

நயன்தாரா நடித்துள்ள ‘கனெக்ட்’ படத்தின் டிரைலர் அப்டேட்

இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா ‘கனெக்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘கனெக்ட்’ படத்தின் டீசர் சமீபத்தில் நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கனெக்ட்’ திரைப்படத்தின் டிரைலர் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இடைவேளை இல்லாமல் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் மொத்த நீளம் 99 நிமிடம் ஆகும். ‘கனெக்ட்’ திரைப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version