Home மலேசியா வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியாததற்காக 43 ஓட்டுநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியாததற்காக 43 ஓட்டுநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

புக்கிட் மெர்தாஜாம், டிசம்பர் 7 :

செபராங் ஜெயாவில், பினாங்கு சாலை போக்குவரத்து துறை நேற்று நடத்திய, சோதனையில் வாகனம் ஓட்டும்போது சீட் பெல்ட் அணியதாத குற்றச்சாட்டில், 43 வாகன ஓட்டிகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான அறிவிப்பு வழங்கப்பட்டது.

இந்த நடவடிக்கை மாநில JPJ இன் மேற்பார்வையின் கீழ், மோட்டார் சைக்கிள் அமலாக்கப் பிரிவு (UPB) மூலம் “சீட் பெல்ட் நடவடிக்கை” என்ற குறியீட்டுப் பெயர் மூலம் அமலாக்கம் மேற்கொள்ளப்பட்டது.

வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியாத குற்றத்திற்காக விதி 4, மோட்டார் வாகன விதிகள் சட்டம் 1978 இன் படி அமலாக்கம் செய்யப்பட்டது என்று பினாங்கு சாலை போக்குவரத்து துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version