Home Top Story லவ் டுடே இந்தியில் ‘ரீமேக்’

லவ் டுடே இந்தியில் ‘ரீமேக்’

சிறிய பட்ஜெட்டில் தயாராகி கடந்த மாதம் திரைக்கு வந்த ‘லவ் டுடே’ படம் பல மடங்கு வசூல் குவித்து திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. சுமார் ரூ.4 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் தியேட்டர்கள் மூலம் மட்டுமே ரூ.70 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக தகவல். ஓ.டி.டி. உரிமை மூலமும் பெரிய தொகை வந்துள்ளது.

தெலுங்கில் வெளியிட்டும் அதிக லாபம் பார்த்துள்ளனர். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து டைரக்டும் செய்து இருந்தார். நாயகியாக இவானா நடித்து இருந்தார். அடுத்து ‘லவ் டுடே’ படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய உள்ளனர். இந்தி பதிப்பில் கதாநாயகனாக நடிக்க வருண் தவான் பெயர் அடிபடுகிறது.

இந்தி பதிப்பையும் பிரதீப் ரங்கநாதனே இயக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. ஏற்கனவே தமிழில் வெற்றி பெற்ற பல படங்கள் இந்தியில் ரீமேக் ஆகி உள்ளன. சூர்யா நடித்த சூரரை போற்று படமும் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version