Home மலேசியா கிளாந்தான், ரந்தாவ் பாஞ்சாங்கில் வெள்ள நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது

கிளாந்தான், ரந்தாவ் பாஞ்சாங்கில் வெள்ள நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது

ரந்தாவ் பாஞ்சாங் பகுதியில் வெள்ள நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. அப்பகுதியில் 600 ஆக இருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 1,157 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி, InfoBencanaJKM இணையதளத்தின் தரவுகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட அனைவரும் அங்குள்ள ஐந்து தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

மேலும் ரந்தாவ் பாஞ்சாங்கில் உள்ள சுங்கை கோலோக்கின் நீர்மட்டம் அதன் எச்சரிக்கை அளவான 9.58 மீட்டரைத் தாண்டியுள்ளது, அதே நேரத்தில் கோலா ஜம்பு, தும்பாட்டிலுள்ள சுங்கை கோலோக் எச்சரிக்கை மட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version